கதை நியூ யார்க் நகரில் ஆரம்பம் ஆகிறது, கமலஹாசன் ஒரு கதக் கலைஞர். அவர் மனைவி பூஜா குமார் கமல் மீதுள்ள சந்தேகத்தால் ஒரு பிரைவேட் துப்பறியும் நிபுணரை அவர் பின் ஏவுகிறார். அவரை எதிர்பாரதவிதமாக அல் கயிதா தீவிரவாதிகள் கொன்றுவிடுகிறார்கள்.
ஏன் கொன்றார்கள்? ஏன் கமல் மீது பூஜாவுக்கு சந்தேகம்? கமலுக்கும் அல் கயிதா தீவிரவாதிகளுக்கும் என்ன சம்மந்தம் ? இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்லிகொன்றே செல்கிறது கதை. சுருக்கமா சொல்லனும்னா, ஒரு தீவிரவாதியின் பாராவில் இருந்து நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான் இந்த கதை. ஆங்கிலத்தில் பாயிண்ட் ஆப் வீயு ( Point Of View ) என்று சொல்ல கூடிய கதை.
உலகில் உள்ள பெரும்பான்மையான தமிழ் மக்கள் இன்னும் இந்த படத்தை பார்காததினால் கதையை நான் மேலும் விவரிக்கவோ, விவாதிக்கவோ போவதில்லை. மற்ற சிறப்பம்சங்களை மட்டும் பாக்கலாம்.
இக்கதை தமிழ் மட்டுமல்லாது இந்திய சினிமா இதுவரை பார்த்திராத கதை, எவ்வளவோ விஜயகாந்த் தீவிரவாதிகளை சுட்டுகொன்று நாட்டை காப்பாற்றும் படங்கள் இருந்தாலும், இக்கதையை அந்த மாதிரி சாயல் இல்லாமல் மிகவும் நுணுக்கமாகவும் ஆராய்ந்தும் செதுக்கி இருக்கிறார் கமல்.
ஒளிப்பதிவு மிகவும் அற்புதமாக கையாழப்பட்டிருகிறது. சில காட்சிகள் "அட கேமரா சூப்பரா இருக்கே" என்று மெச்சும் அளவில் இருந்தது. சண்டை மற்றும் சாகச காட்சிகளில் கூட கேமராவை வலிப்புவந்தது போல ஆட்டாமல் மிகவும் தெளிவாக காட்டி இருக்கிறார் ஒளிபதிவாளர். பல காட்சிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கேமராக்கள் கொண்டு பல கோணங்களில் காட்சிகள் படமாக்கப்படிருப்பது தெரிகிறது. இது போன்றவை Hollywood படங்களில் பார்க்கலாம், 4 கேமரா ஒரு காட்சியில் வெய்பது சாதரணமான காரியம் அல்ல. இதோடு நிற்கவில்லை கமல் , சில முக்கியமான காட்சிகளில் டைம் ஸ்லைஸ் "Time Slice" முறை மூலம் வியக்க செய்கிறார். ( Matrix, பாய்ஸ் , அந்நியன் ) போன்ற படங்களில் இதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
பின்னணி இசை மிகவும் தெளிவாகவும் அளவாகவும் அமைத்திருகிறார்கள் "Shankar - Eshan - Loy". படம் நீளமாக இருப்பதை உணர்ந்தோ என்னவோ படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கபட்டிருக்கிறது , அதுவும் கதையோடு ஒன்றியே இருக்கிறது. நான் பார்த்த அரங்கில் Auro 3D அமைக்கப்படவில்லை :( , அனால் பல சப்தங்கள் மிக துல்லியமாகவும் அழுத்தமாகவும் இருந்தது. இன்னும் சற்று நேரம் இருந்திருந்தால் தலைவலி நிச்சியம்!!
கதையின் அளவை சிறிது குறைத்திருக்கலாம் என்று எனக்கு தோன்றியது, சில காட்சிகள் நன்றாக இருந்தாலும் அவற்றை தவிர்த்து ஒரு 15 -20 நிமிடங்களை குறைத்திருந்தால் இன்னும் திரைக்கதைக்கு வலு கிடைத்திருக்கும், இறுதிக்காட்சிகளுக்கும் இது பொருந்தும். நடுவில் எப்படா கதை அமெரிக்கா செல்லும் என்று தோன்றுவது மட்டுமில்லாமல் என் நண்பரிடமும் கேட்டேன், அவரும் நானும் அதுக்கு தான் காத்துட்டு இருக்கேன்னு சொன்னார்.
கதையில் ஏராளமான கதாபாத்திரங்கள், மனதில் நிற்பதோ 5 பேர் தான். அண்ட்ரியாவின் பங்கு என்ன என்று பல முறை யோசித்தும் விளங்கவில்லை ( உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள் ). கமல் தனது நண்பர்களை என்றைக்கும் விட்டுவிடுவதில்ல நாசெரின் பாத்திரம்அதற்கு சாட்சி. சந்தான பாரதியும் எங்காவது தென்படுவாரா என்று பார்த்தேன் , கிடைக்கவில்லை :). பூஜா தன் காட்சிகளில் நன்றாக வெகுளித்தனமாக நடித்துள்ளார். கதக் கலைஞராக வரும் காட்சிகளில் கமல் நடிப்பை சொல்ல வார்த்தை இல்லை.
படத்தை மீண்டு ஒருமுறை பார்க்கலாம், சண்டை காட்சிகளுக்காகவும், இசைக்காகவும். விஸ்வரூபம் என்னை பொறுத்த வரையில் ஒரு புதிய முயற்சி மட்டும் அல்ல, ஒரு வெற்றி படமும் கூட.
இந்த திரைப்படத்தின் ரேட்டிங் 7.5/10
சரி இதெல்லாம் இருக்கட்டும் , படத்தில் அப்படி என்ன, பெரிய சமுதாய சீர்கொளைவுக்கு காரணமாக உள்ளது ???
- அல் கயிதா என்றால், விரல் சூப்பும் குழந்தை கூட ஆப்கானிஸ்தான், ஒசாமா என்று சொல்லும்.
- கதை ஆப்கானிஸ்தானில் நகர்கிறது, அப்படி இருக்கும்பட்சத்தில் அந்த ஊரை சார்ந்த் முஸ்லிம் மக்களை தான் காட்ட முடியுமே தவிர , கிறிஸ்துவ மக்களையோ, இந்து மக்களையோ காட்ட இயலாது.
- தீவிரவாதிகள் என்ன செய்வார்கள் எப்படி செய்வார்கள் என்பதை பற்றி தான் கதை இருக்கிறது.
- அல் கயிதாவை சேர்ந்தவர்கள் இரத்த தானமோ , சமூக சேவைகளோ செய்யவில்லை, அவர்கள் என்ன செய்தார்களோ அதை தான் கமல் படமாக தயாரித்திருக்கிறார்.
படம் ஒரு தீவிரைவாதியின் பார்வையில் , அவர்கள் வாழ்கையில் நடப்பதை சார்ந்தது, மேலும் கதையில் கமல் ஒரு நல்ல முஸ்லிமாக வருகிறார்.
எனக்கு என்ன குழப்பம் என்றால், ஒரு சில பகுதிகளில் வாழும் முஸ்லிம்களை மட்டும் எப்படி இந்த திரைப்படம் காயபடுத்தாமல், தமிழ் நாடு மற்றும் சில இடங்களில் உள்ள மக்களை மட்டும் காயபடுத்தி சமுதாய சீர்குலைவை ஏற்படுத்தும்????
திரைத்துறை என்னும் ஊடகத்தை நிஜ வாழ்கையோடு ஒப்பிடாமல், கேளிக்கைக்காக மட்டும் அதை பார்த்தால் அனைவருக்கும் நல்லது.